இன்று சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ”ரேசன் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேசன் கார்டு ரத்துசெய்யப்படாது” என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சமீபத்திய அறிக்கையில் 3 மாதங்கள் தொடர்ந்து ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பை தமிழக அரசு பின்பற்ற கூடாது என திமுக எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 3 மாதம் தொடர்ச்சியாக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் கார்டு ரத்து செய்ய வேண்டும் என்பது மத்திய அமைச்சரின் அறிவுரைதான் என்றும், அரசின் கொள்கை முடிவு அல்ல என்றும் கூறினார்.
வருங்காலங்களிலும் தமிழகத்தில் 4, 5 மாதங்கள் வரை ரேசன் கடைகளில் உணவு தானியங்கள் வாங்காமல் இருந்தாலும், சம்மந்தப்பட்ட நபர்கள் அந்தந்த பகுதியில் வசிப்பதை உறுதி செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அந்த முறையே தொடரும் என்றும், மத்திய அமைச்சரின் அறிவுரை அமல்படுத்தப்படமாட்டாது என்றும் அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார்.

இதையும் படியுங்கள்

எல்.இ.டி., எல்.சி.டி. டிவிக்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எல்.இ.டி, எல்.சி.டி, டிவிக்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுதொடர்பாக மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகத்திடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள் என அமெரிக்கா பட்டியலிட்டு, ஜி.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற திட்டத்தின்கீழ்...
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான என்.சீனிவாசன் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் களை நியமித்து ஆந்திர மாநில...
சவுதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவுதி அரேபிய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார். சவுதி அரேபியாவில் அரம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த...
இந்தி திணிப்பு வேண்டாம். ஆனால், பொதுமொழி ஒன்று இருப்பது நல்லதென நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் கூறி இருந்தார். அவர், "தமிழ்நாடு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்துக்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிருஷ்டவசமாக நம் நாட்டுக்கு...
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.77 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் எரிபொருள் தேவை பெருமளவில் இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது...