இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய வீரர்களின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் தொடங்கிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கியது. தொடக்கம் முதலே விக்கெட்கள் சரியத் தொடங்கின. இன்றைய போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சார்கள் பயன்படுத்தவே இல்லை.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி வெற்றிபெற 49 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 25 ரன்களும், கில் 15 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 49 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதனையடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என முன்னிலை வகிக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here