DeoGt3oV4AAulq-
ஜியோ போஸ்ட்பெயிட் சலுகையை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ ஹாலிடே ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.399 ரீசார்ஜ் செய்து ரூ.100 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதாவது வழக்கமாக ரூ.399க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த ஹாலிடே ஹங்காமா திட்டத்தின் மூலம் ரூ.299க்கு ரீசார்ஜ் செய்தாலே போதுமானது. இதற்கு 84 நாட்கள் வேலிடிட்டியும், நாள்தோறும் 4ஜி வேகத்தில் 1.5 ஜிபி இலவச டேட்டாவும், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ சேவைகள் வழங்கப்படுகிறது.

ஆனால், ஹாலிடே ஹங்காமா திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்கள் ரிலையன்ஸின் மை ஜியோ ஆப்ஸ் மூலம், போன்பே(PhonePe)செயலி மூலம் ரீசார்ஜ் செய்யவேண்டும்.

இத்துடன் மைஜியோ செயலியை பயன்படுத்துவோர் போன்பெ மூலம் பணம் செலுத்தும் போது ரூ.100 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
DenwpfZVQAA3gVE

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்