சென்னை கெல்லீசில் அரசு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலிருந்து தப்பிச்சென்று பிடிபட்ட 29 சிறுவர்கள் செங்கல்பட்டு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.

சென்னை கெல்லீசில் அரசு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவில், அங்கிருந்த 33 சிறுவர்கள் தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகவும், அதனை 10 சிறுவர்கள் தடுத்ததால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமையன்று மீண்டும் அந்தச் சிறுவர்கள் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த வார்டனையும், தடுக்க வந்த சிறுவர்களையும் தாக்கிவிட்டு தப்பினர்.

இது குறித்து வார்டன், அளித்த தகவலின்படி காவல்துறையினர் விரைந்து வந்து, தப்பியச் சிறுவர்களில் 25 பேரை பிடித்தனர். மற்ற சிறுவர்களில் நான்கு பேர், பிளேடால் தங்கள் உடலை கீறிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் நான்கு பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், தப்பிச்சென்று பிடிபட்ட 29 சிறுவர்கள் செங்கல்பட்டு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்