பிஎஸ்என்எல் குறைந்த ரூ27 விலையில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பேக் அறிமுகம் செய்துள்ளது.

27 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ள இந்த பேக்கில், டேட்டா, அன்லிமிடட் அழைப்பு வசதிகளை கொண்டுள்ளது. 7 நாட்கள் வேலிடிட்டி உள்ள இந்த பேக்கில், 1ஜிபி டேட்டா, 300 மெசேஜஸ், அன்லிமிடட் அழைப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி இந்த பேக் விற்பனைக்கு வர உள்ளது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது

27 ரூபாய் மதிப்பில் மற்ற பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பேக் இருந்தால், அவற்றின் விலை மாற்றி அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஜியோவில் , 52 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 7 நாள் வேலிட்டியுடன் 1.05 ஜிபி டேட்டா, 70 மெசேஜ்கள் கொண்டுள்ளது. எனவே, பிஎஸ்என்எல் அறிமுகம் செய்திருக்கும் 27 ரூபாய் பேக், ஜியோவிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஏர்டெல், வோடாஃபோன் போன்ற மற்ற நிறுவனங்களும் குறைந்த விலையில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை விற்பனை செய்து வருகிறது.

ஏர்டெல் , 47 ரூபாய் பேக்கில், 150 நிமிடங்கள் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் அழைப்புகள். 500 எம்பி 3ஜி/4ஜி டேட்டா ஆகியவை கொண்டுள்ளது.

வோடாஃபோன் , 47 ரூபாய் பேக்கில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் 7,500 நொடிகள் அல்லது 125 நிமிடங்கள் லோக்கல், எஸ்டிடி அழைப்புகள், 50 லோக்கல், நேஷனல் மெசேஜ், 500 எம்பி 3ஜி/4ஜி டேட்டா கொண்டுள்ளது .

Courtesy : NDTV

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்