2500 ரூபாய்க்கு 5G ஸ்மார்ட்போன்: பிரபல நிறுவனம் திட்டம்

Jio planning to sell 5G smartphones for Rs 2,500-3,000 apiece: Company official

0
125

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரி தெரித்துள்ளார். இந்தியாவில் தற்போதைய சூழலில் 20 கோடி முதல் 30 கோடி பேர் 2ஜி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்களை குறிவைத்து குறைவான விலைக்கு 5ஜி  ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரி பேசியபோது, “5000 ரூபாய்க்கும் குறைவான விலையில் மக்களுக்கு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய வேண்டுமென்பதே ஜியோவின் விருப்பம்.

இதன் வரவேற்பைப் பொறுத்து ஸ்மார்ட்போன் விலை ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை குறைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்திய சந்தையில் விற்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன்களின் குறைந்தபட்ச விலை ரூ.27,000 க்கும் மேல்.

இந்தியாவில் தற்போதைய சூழலில் 5ஜி சேவைகள் இல்லை. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி சேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த 5ஜி சேவைகளை இந்தியாவில் கொண்டுவர முகேஷ்அம்பானி தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்.

5ஜி சேவைக்காக, ஜியோ நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவில், உலகத்தர 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.  இதற்காக ஃபேஸ்புக், கூகுள், கேகேஆர், சில்வர் லேக் என சர்வதேச நிறுவனங்கள் ஜியோவில் பல்லாயிரம் கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here