அயோத்தி பிரச்சினை தொடர்பாக வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறிய கருத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அளித்த பேட்டியில், ராமர் கோவில் பிரச்சனைத் தீர்க்கப்படவில்லையென்றால் சிரியாவாக இந்தியா இருக்கும் எனக் கூறினார். மேலும் அவர், ராமர் கோவில் விவகாரம் என்பது 100 கோடி இந்துக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையது என்றும், அயோத்தி இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடம் கிடையாது என்றும் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் மருத்துவமனை கட்டுவதற்கு ஒப்புக்கொள்ளும் இஸ்லாமியர்கள், ராமர் கோவில் கட்டுவதற்கு மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். அவரின் இந்தப் பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

இது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்தத் தலைவர் கேசி தியாகி, “ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இதுபோன்று ஆத்திரமூட்டும் பேச்சுகளை விட்டு விலகி இருக்க வேண்டும்” என்றார். அதேபோன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் மஜித் மேனன், “ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் இந்தப் பேச்சு கவலை அளிக்கிறது. கலவரத்தை வளர்க்கும் விதமாக பேசுவார் என நான் எதிர்பார்க்கவிலை” என்றார். மேலும் அவர், ”25 வருடங்களாக நீங்கள் எங்கு இருந்தீர்கள்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here