25 பேரை கட்டி வைத்து ‘பசு மாதா கி ஜே’ என்று சொல்ல வைத்த பசுக்குண்டர்கள்

0
620

மத்திய பிரதேசம், கண்ட்வா மாவட்டத்தில் சன்வாலிகேதா கிராமத்தில் 100 பேர் சேர்ந்த கும்பல் 25 பேரை கட்டி வைத்து தோப்பு கரணம் போடவைத்து பசு மாதா கி ஜே (“Gau mata ki jai” ) சொல்ல வைத்தும் 2 கிலோ மீட்டர் நடக்க வைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளது . 

25 பேரும் பசுவை கடத்தினார்கள் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளது அந்த 100 பேர் சேர்ந்த கும்பல். 

25 பேர் கட்டி வைக்கப்பட்டு , தோப்புக்கரணம் போடும்   வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

25 பேர் மீதும், 100 பேர்க் கொண்ட கும்பல் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தேவையான அனுமதிகள் ஏதுமில்லாமல் கால்நடைகளை ஏற்றிச் சென்ற அந்த 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றும் அவர்களை கட்டி வைத்த கும்பல் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றும் கண்ட்வா எஸ்பி சிவ் தயாள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். 

25 பேரும் மத்திய பிரதேசம் ஹர்டா மாவட்டத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு கால்நடைகளை ஏற்றிச் சென்றனர் என்றும் அவற்றை ஏற்றிச் சென்ற 21 வாகனங்களையும் பிடித்துள்ளோம் என்றும்  கல்வாஸ் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஹரிசங்கர் ராவத் கூறியுள்ளார்.  

ஏ என் ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி 7லிருந்து 8 வாகனங்கள் பிடிபட்டன என்கிறது.  

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் அரசு  பசுக்குண்டர்கள் மக்கள் மீது நடத்தும் வன்கொடுமையைத் தடுக்கும் முயற்சியாக அவர்களுக்கு எதிராக  சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இருக்கிறது. 

பசுக்குண்டர்கள் மக்கள் மீது நடதும் வன்முறை தண்டனைக்குரிய குற்றம் என்று ஜூன் 27 அன்று திருத்தம் கொண்டு வரலாம் என்று மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.