உலகின் முதல் பெண்கள் சிறப்பு புறநகர் ரயில் சேவை தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் (இன்று) 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மேலும் மேற்கு மண்டல இரயில் சேவையின் நீண்ட பயணத்தில் இது ஒரு மைல்கல் ஆகும். மேற்கு ரயில்வே மே 5, 1992ஆம் ஆண்டு பெண் பயணிகளுக்கான முதல் ரயில் சேவையை இயக்கத் தொடங்கியது. இது உலகின் முதல் பெண் பயணிகளுக்கான ரயில் சேவையாக இருந்தது.

இதையும் படியுங்கள் : காஷ்மீர்: 9 வயது சிறுமி உட்பட 5 பேரைக் கடுமையாகத் தாக்கிய பசுக் காவலர்கள்

இதுகுறித்து பேசிய ரயில்வே அதிகாரி ஒருவர், “இந்த சேவையானது சர்ச்கேட் மற்றும் போரிவிளிக்கு இடையில் தொடங்கப்பட்டது. பின்னர் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து விரார் வரை சேவை விரிவாக்கப்பட்டது. அன்றிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பெண் பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள்” என கூறியுள்ளார்.

மேலும் ரயில் சேவையின் ஒரு மைல்கல்லாக இது அமைந்துள்ளது. இந்த சேவை பெண் பயணிகளுக்கான ஒரு வரம். 1990களில் மும்பை தெற்குப் பகுதி பெருமளவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் வளர்ச்சியடைந்தது. இதனையடுத்து உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் இந்த பெண்கள் சிறப்பு ரயில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் அமைந்தது என மேற்கு ரயில்வே தலைமை பொதுத்துறை அதிகாரி ரவிந்தர் பர்க்கர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : கொடநாடு கொலை வழக்கு: 2 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

மேலும் அவர், பெண் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதில் மேற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. மேற்கு ரயில்வே தற்போது வரை 60 பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளது. ஒரு புதிய பாதுகாப்பு நடவடிக்கையாக டாக் பேக் திட்டம் இந்தாண்டு சர்வதேச மகளிர் தினத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் எந்தவொரு பெண் பயணியும் உடனடியாக அவசரகாலத்தில் இரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும் என பர்க்கர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : வாவ்… சீனாவில் 9000 திரையரங்குகளில் வெளியான தங்கல்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்