விவோ வி23 மற்றொரு வேரியண்ட்டை விவோ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மாதத்தில் விவோ எக்ஸ் 23 ஸ்டார் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது எக்ஸ் 23 சிம்போனி எடிஷன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. விவோ எக்ஸ்23 வேரியண்ட் செப்டம்பர் மாதம் வெளியானது. விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷன் புதிய கிரேடியண்ட் நிறத்தை கொண்டுள்ளது. மேலும், ரேம், ப்ராசஸர் மற்றும் கேமிராவில் சிறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷனின் விலை

விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷன் சீன விலை CNY 2,798 (ரூ. 28,900). இது முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எக்ஸ்23-ன் அறிமுக விலையை விட ரூ.8,000 குறைவு. இந்த ஸ்மார்ட்போன் தற்போது விவோவின் சீன இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.

விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷனின் முக்கிய அம்சங்கள்

விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷனில் ப்ராசஸர், ரேம் மற்றும் முன்பக்க கேமிராவில் விவோ புதிய மாறுதல்களை செய்துள்ளது. விவோ 23 சிம்போனி எடிஷன் டூயல் சிம் ஸ்மார்ட்போனாகும். இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாக கொண்ட funtouch OSயைக் கொண்டுள்ளது. மேலும் 6.41 இன்ச் ஹெச்.டி + சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேயை பெற்றுள்ளது.

விவோ சிம்போனி எடிஷனில் டூயல் கேமிரா உள்ளது. 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் உடன் f/1.8 aperture மற்றும் 13 மெகா பிக்சல் செகண்டரி சென்சார் f/2.4 apertue மற்றும் 125 டிகிரி சூப்பர் ஒயிட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷன் 24.8 மெகா பிக்சல் முன்பக்க கேமிராவைக் பெற்றுள்ளது. 128ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here