ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காதி செக்டார் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்துக்குள் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கடந்த வெள்ளிக்கிழமை (அக்.6), ராஜோரி மாவட்டத்தின் பாபாகோரி உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோன்று, கடந்த அக்.3ஆம் தேதியன்று, பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைகட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.

நன்றி: ZeeNews

இதையும் படியுங்கள்: மன உளைச்சலில் இருக்கும் விவசாயியா நீங்கள்? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்