புதிய ஐகியர் சவுண்ட்பார் என்செம்பிள்

Indian Gadgets and Smartphone Accessories brand iGear proudly announces ‘Ensemble,’ a portable TWS multifunctional soundbar with a built-in subwoofer for high bass and theatre-like experience.

0
75

இந்தியாவை சேர்ந்த அக்சஸரீ பிராண்டு ஐகியர் புதிதாக ட்ரூ வயர்லெஸ் போர்டபிள் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய சவுண்ட்பார் என்செம்பிள் என அழைக்கப்படுகிறது. இது மறு சுழற்சி செய்யப்பட்ட மரத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பேட்டரியால் இயங்கும் இந்த சவுண்ட்பார் பில்ட்-இன் சப் வூபர், 20 வாட் பவர் வழங்குகிறது. மேலும் இது வழக்கமான ஏபிஎஸ் பிளாஸ்டிக் ஸ்பீக்கர்களை விட சிறப்பான ஆடியோ அனுபவத்தை அளிக்கிறது.

அதிகபட்சம் 20 வாட் பவர் அவுட்புட் வழங்கும் ஐகியர் என்செம்பிள் முன்புறத்தில் நான்கு 5 வாட் ஸ்ப்லிட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இதில் உள்ள பில்ட்-இன் சப் வூபர் அதிக பேஸ் வழங்குகிறது.

61-Y3a3-Nnc3-L-SL1089

இவற்றுடன் பில்ட் இன் எப்எம் ரேடியோ, யுஎஸ்பி போர்ட் மற்றும் கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இதில் வழங்கப்பட்டுள்ள 2400 எம்ஏஹெச் பேட்டரி, ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்பீக்கர் 3 முதல் 5 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் இதன் விலை ரூ. 1499 என நிர்ணயம்செய்யப்பட்டு உள்ளது. ஐகியர் என்செம்பிள் போர்டபிள் ஸ்பீக்கர் அமேசான் மற்றும்ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here