மாஸ்கோவில் இருந்து யுரல் ஏர்பஸ் 312(UralAirlines) விமானம்,  226 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் கிரீமியாவிற்கு புறப்பட்டது. விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விமானத்தின் எஞ்சின் மீது பறவைகள் கூட்டம் ஒன்று வந்து மோதியது. இதனையடுத்து விமானத்தின் கீழ் பகுதியில் லேசான தீ ஏற்பட்டதுடன் விமானம் ஆடத் தொடங்கியது. விமானம் தொடர்ந்து பயணித்தால் விபத்துக்குள்ளாக நேரிடும் என்பதால், உடனடியாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார் விமானி. ஆனால், அருகில் விமான நிலையம் இல்லாததால், சோளக்காட்டில் விமானத்தை தரையிறக்கினர். 

விமானியின் சாதுரியத்தால், விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் பத்திரமாக வெளியேறினர். அவர்கள் அனைவரும் விமானி, டாமிர் யுசுபோவ் (41)( Damir Yusupov ) வை கட்டியணைத்து பாராட்டுகளையும் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றியையும் தெரிவித் தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவரது திறமையை பாராட்டி ஏராளமானோர் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த விமானத்தை இயக்கிய விமானிகள் டாமிர் யுசுபோவ்(Damir Yusupov), ஜியார்ஜி முர்ஸின்(George Murzin) ஆகியஇருவருக்கும் ’ஹீரோ ஆஃப் ரஷ்யா’ என்ற விருது வழங்க ரஷ்யா அரசு முடிவு செய்துள்ளது. அந்த விமானத்தில் பயணித்த விமான ஊழியர்களுக்கு தைரியத்துக்கான விருது வழங்கப்பட இருக்கிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here