வாட்ஸ்அப் செயலியில் மீண்டும் அசத்தலான புதிய அப்டேட்ஸ்

WhatsApp already supports fingerprint unlock on Android. On the other hand, the iOS app already has a face unlock option.

0
122

வாட்ஸ்அப்  நிறுவனம் தனது பீட்டா செயலியில் 2.20.203.3 அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. 

புதிய அப்டேட்டில் பேஸ் அன்லாக் மற்றும் மிஸ்டு கால்களில் இணைவது உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

BIOMETRIC-LOCK-ANDROID-Whatsapp-000

வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த கைரேகை வசதியுடன் பேஸ் அன்லாக் வசதியும் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் பேஸ் அன்லாக் வசதி அதிக பிரபலமாகி வருவதை அடுத்து வாட்ஸ்அப் இதனை தனது செயலியில் சேர்ப்பதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது.

தற்சமயம் வாட்ஸ் அப்பில் க்ரூப் கால்களை ஏற்கவில்லை எனில், கால் செய்தவர் முயற்சிக்காமல் பயனர்களால் அதில் இணைய முடியாத நிலை உள்ளது. 

JOIN-MISSED-CALL-ANDROID-000

இந்நிலையில், இந்த பிரச்சனையை தீர்க்க, மிஸ்டுகால்களில் இணைந்து கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. இந்த வசதிக்ரூப் கால் நிறைவுறும் வரையில் செயல்படும். இதனை இயக்க பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை திறந்தாலே போதுமானது. பின் திரையில் அழைப்பில் இணைந்து கொள்ள கோரும் ஆப்ஷன் தோன்றும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here