போதைப் பொருள் பொட்டலத்தை பனாஸ்கந்தா காவல்துறையே வைத்தது என்ற வழக்கில் குஜராத் சிஐடி போலீஸ் இன்று புதன்கிழமை ஐபிஎஸ் சஞ்சீவ் பட்டை கைது செய்தது . 1996-ஆம் ஆண்டு ஒரு கிலோ அளவில் போதைப் பொருள் வைத்திருந்ததாக சஞ்சீவ் பட் தலைமையிலான பனஸ்கந்தா போலீஸார் சுமர்சிங் ராஜ்புரோஹித் எனும் வழக்கறிஞரை கைது செய்தனர்.

ஐபிஎஸ் சஞ்சீவ் பட் 1996 ஆம் ஆண்டு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக இருந்தார், அவருடன் இருந்த மற்ற 7 போலீஸாரும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று சிஐடி டிஜிபி ஆஷிஷ் பாட்டியா இந்தக் கைது பற்றி தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு ஐபிஎஸ் சஞ்சீவ் பட்டின் தலைமையிலான போலீஸ் படை வழக்கறிஞர் சுமர்சிங் ராஜ்புரோஹித்திடமிருந்து 1 கிலோ போதைப் பொருளை கைப்பற்றியது. பலன்பூர் நகரில் ராஜ்புரோஹித் தங்கியிருந்த விடுதியில் இருந்து அந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பனஸ்கந்தா போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கறிஞர் சுமர்சிங் ராஜாபுரோஹித் மீதான குற்றச்சாட்டு , ஐபிஎஸ் சஞ்சீவ் பட் மற்றும் அவரது போலீஸ் படையால் வேண்டுமென்றே புனையப்பட்ட குற்றச்சாட்டு என்று இந்த வழக்கை விசாரித்த, ராஜஸ்தான் போலீஸ் கூறியது . மேலும் பனஸ்கந்தா போலீஸ் வழக்கறிஞர் சுமர்சிங் ராஜாபுரோஹித்த்தை அவருடைய ராஜஸ்தான் வீட்டிலிருந்து கடத்தியது என்றும் ராஜஸ்தான் போலீஸ் கூறியது.

சஞ்சீவ் பட் மற்றும் அவரது போலீஸ் படை தன்மீது தவறாக குற்றம் சாட்டுகிறார்கள் ஏனெனில் முன்னாள் நீதிபதி ராமன்லால் ராஜ்மல் ஜெயினின் சகோதரி வீட்டில் தான் வாடகைக்கு இருந்தேன் . அங்கிருந்து தன்னை வலுக்கட்டாயமாக வெளியேறவைத்தனர் என்று வழக்கறிஞர் சுமர்சிங் ராஜாபுரோஹித் கொடுத்த புகாரில் கூறியிருந்தார்.

சுமார் 4 மாதங்களுக்கு முன்பு குஜராத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது என்றும் இதற்காக ஒரு சிறப்பு விசாரணை குழுவை உருவாக்கினோம் என்றும் சிஐடி டிஜிபி ஆஷிஷ் பாட்டியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார். மேலும் இந்தக் குழு சஞ்சீவ் பட் வழக்கறிஞருக்கு எதிராக வழக்கை புனைந்த முறையில் குற்றவாளி என்றும் அவர் கூறினார்.

ஐபிஎஸ் சஞ்சீவ் பட் மோடிக்கு எதிரான விமர்சனங்களை அடிக்கடி பதிவிடுபவர். 2002 குஜராத் கலவரத்தின் போது மோடி இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிக்கொணர வேண்டும் என்றும் குஜராத் கலவரத்தைத் தூண்டியவர் என்றும் மோடிக்கு எதிராக பேசியவர் இவர் . குஜராத் கலவர வழக்கில் பாதிகப்பட்ட பொதுமக்களுக்கு நீதி கிடைக்க முக்கிய பங்காற்றியவர் இவர் .

2015-இல் சஞ்சீவ் பட் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அலுவல் வேலைகளுக்காக கொடுத்திருந்த காரை சொந்த விசயங்களுக்காக பயன்படுத்தியதும் , நீண்டநாட்கள் விடுப்பில் இருந்ததும் காரணமாக கூறப்பட்டது

Courtesy : Scroll in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here