21 வயதான டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் சித்தார்த்துக்கு உபேர் நிறுவனத்தில் வருடத்திற்கு 1.25 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

உபேர் (Uber Technologies) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது குறித்து மாணவர் சித்தார்த், “நான் எனது எதிர்காலம் குறித்து திட்டமிடவில்லை. அக்டோபரில் சான் பிராசிஸ்கோ செல்லத் திட்டமிட்டிருந்தேன். விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், பெங்களூரில் உள்ள உபேர் நிறுவனத்தில் சேர்ந்தேன். ஏழு வார இண்டர்ன்ஷிப்பில் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வரைபடங்கள் வடிவமைக்கும் அணியிலும் சித்தார்த் இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மிகப்பெரிய வேலைவாய்ப்பைப் பெறும் இரண்டாவது மாணவர் சித்தார்த் ஆவார். கடந்த 2015ஆம் ஆண்டில் மென்பொருள் நிறுவனமான கூகுள் ரூ.1.27 கோடி ஆண்டு வருமானத்திற்கு மாணவர் ஒருவரைத் தேர்வு செய்ததிருந்தது.

இதுகுறித்து பல்கலைக்கழக வேலைவாய்ப்புப் பிரிவுத் தலைவர் வாலியா, “இண்டர்ன்ஷிப்பின்போது சித்தார்த் தனது திறமையை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என கூறினார்.

இதையும் படியுங்கள் : மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்