21% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தபட்டிருக்கிறது என்பது இந்தியாவிற்கு ஆபத்து; இந்தியா ஆபத்தில் இருப்பதை தான் பாஜகவினர் கொண்டாடி வருகிறார்களா? -சித்தராமையா

0
329

நாட்டு மக்கள் தொகையில் வெறும் 21 சதவிகிதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை பாஜக ஏன் கொண்டாடி வருகிறது என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில் 100 கோடி தடுப்பூசி என்று சொல்லும்போது பிரமிப்பாக தெரியலாம். ஆனால், அதன் விவரங்களில்தான் உண்மை அடங்கியுள்ளது. 139 கோடியில் 29 கோடி பேருக்கும் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 21 சதவிகித மக்களுக்கு  மட்டுமே முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. இதை ஏன் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். வெறும் 21 சதவிகித மக்களுக்கு மட்டும்  தடுப்பூசி செலுத்தியதற்காகவா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“வெறும் 29 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 42 கோடி பேருக்கு ஒரு டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 62 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை. வெறும் 29 கோடி பேர் (21%) மட்டுமே தான் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்பது இந்தியாவிற்கு ஆபத்து. இந்தியா ஆபத்தில் இருப்பதை தான் பாஜகவினர் கொண்டாடி வருகிறார்களா?” 

“அமெரிக்காவில் 56% , சீனாவில் 70%, கனடாவில் 71%  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வெறும் 21% பேருக்குதான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அவர்களே கொண்டாடுவதற்கு முன்னால் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள். கொண்டாடுவதை நிறுத்திவிட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள்” என கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here