வரும் 2031 – 2041ம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது சரிவு நிலையில் செல்லும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் ஏனோ தானோ வென்று சொல்லப்படவில்லை. தமிழகத்தின் மக்கள் தொகை சரிவு என்பது 0.05% ஆக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் அதாவது 60 வயதுக்கு மேலானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம்.

அதாவது, 2041ம் ஆண்டில் தென்மாநிலங்களில் 20 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாக இருக்கும், ஆனால் அதே சமயம் 59 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்காக அல்லது அதற்கு மேலும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்பட்டிருக்கும் விஷயம்தான் சற்று அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது சமீபத்திய பத்து ஆண்டுகளில் மொத்த கருத்தரித்தல் விகிதம் என்பது வேகமாகக் குறைந்து வருவதும், 2021ம் ஆண்டுகளில் 

மரணத்தை விட, குழந்தை பிறப்பு குறைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Courtesy: DN
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here