2022 உ.பி தேர்தல்; பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் – டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

0
363

2022 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று  ‘டைம்ஸ் நவ்’ நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது 

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய வாக்குக் கணிப்பை ‘டைம்ஸ் நவ்’ ஊடக நிறுவனம் நடத்தியது. உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 முதல் 249 இடங்கள் வரை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஒற்றை இலக்கத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் கருத்து கணிப்பு கூறுகிறது 

இதையும் படியுங்கள்:👇

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 117 இடங்களில் அக்கட்சி 53 முதல் 57 இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 41 முதல் 45 இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸிலிருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அறிவித்துள்ளார். தற்போதைய கருத்துக் கணிப்பு இந்த கூட்டணி அறிவிப்புக்கு முன்பாக எடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:👇

உத்தரகண்டில் ஆளும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கோவாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக கூட்டணிக்கு 18 முதல் 22 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேசம் (403)

கட்சி/கூட்டணி 2017 தொகுதிகள் 2022 கணிப்பு

பாஜக 325 (2017)        230-249 (2022 கணிப்பு)

சமாஜவாதி 48 (2017)    137-152 (2022 கணிப்பு)

பகுஜன் சமாஜ் 19 (2017)    9-14 (2022 கணிப்பு)

காங்கிரஸ் 7(2017)  4-7 (2022 கணிப்பு)

பஞ்சாப் (117)

கட்சி/கூட்டணி 2017 தொகுதிகள் 2022 கணிப்பு

ஆம் ஆத்மி 20 (2017)  53-57 (2022 கணிப்பு)

காங்கிரஸ் 77 (2017) 41-45 (2022 கணிப்பு)

சிரோமணி அகாலி தளம் 15 (2017)       14-17  (2022 கணிப்பு)

பாஜக 3  (2017)     1-3 (2022 கணிப்பு)

மற்றவை 2  (2017)      1-3  (2022 கணிப்பு)

உத்தரகண்ட் (70)

கட்சி/கூட்டணி 2017 தொகுதிகள் 2022 கணிப்பு

பாஜக 56 (2017)       42-48 (2022 கணிப்பு)

காங்கிரஸ் 11 (2017)      12-16 (2022 கணிப்பு)

ஆம் ஆத்மி 0 (2017)       4-7 (2022 கணிப்பு)

மற்றவை 2 (2017)             0-2  (2022 கணிப்பு)

கோவா(40)

கட்சி/கூட்டணி 2017 தொகுதிகள் 2022 கணிப்பு

பாஜக 13 (2017)       18-22 (2022 கணிப்பு)

ஆம் ஆத்மி 0 (2017)      7-11 (2022 கணிப்பு)

காங்கிரஸ் 17 (2017)     4-6 (2022 கணிப்பு)

மற்றவை 10 (2017)      3-5 (2022 கணிப்பு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here