கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் பேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களை 2021ம் ஆண்டு ஜூலை வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல நிறுவனங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததால், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தனது ஊழியர்களை காலவரையின்றி வேலை செய்ய கேட்டுக்கொண்டது. அதேபோல், கூகுள் நிறுவனம், 2021ம் ஆண்டு ஜூன் இறுதி வரை பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவைகளை நிவர்த்தி செய்ய, ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 டாலர் நிதியும் கொடுக்கிறது. இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அனுப்பிய மின்னஞ்சலில், ‘ இது சுகாதாரம் மற்றும் அரசாங்க நிபுணர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆலோசனை செய்து எடுக்கப்பட்ட முடிவாகும்,’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here