மேற்கு வங்கத்தில் 2021 ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

(ஜூன்-30) இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சீனாவின் செயலிகளை இந்தியாவில் தடை செய்வது மட்டும் சரியாக இருக்காது. மாறாக, இந்திய வீரர்கள் மீது தாக்குதலை நடத்திய சீனாவுக்கு பொருத்தமான பதிலை வழங்க வேண்டும். எனினும் இது வெளிவிவகாரத்துறை என்பதால் இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் விட்டுவிடுகிறேன்’ என்றார்.

மேலும், மேற்குவங்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, நாட்டின் 130 கோடி மக்களுக்கும் இலவச ரேஷன் பொருள்கள் கிடைக்கச் செய்வதே மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை நவம்பர் மாதம் இறுதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here