2020 ஹோண்டா சிட்டி : வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Honda City 2020 gets several style upgrades and is packed with features. The fifth-generation City will be sold along with the existing model.

0
128

ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் காரின் விற்பனை கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தாமதமாகி வந்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஜூலை15 ஆம் தேதி, ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய சிட்டி செடான் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 

புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி, டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன்சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல்பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. 

All-New-Honda-City-5-696x383

காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

All-New-Honda-City-6-696x383

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய சிட்டி மாடல் பெட்ரோல் என்ஜின் மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், இவற்றை முற்றிலும் மறுக்கும் வகையில் 2020 ஹோண்டா சிட்டி மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களிலும் வெளியிடப்படுகிறது.

All-New-Honda-City-3-696x383

2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன்1.5 லிட்டர்i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

புதிய ஹோண்டா சிட்டி மாடல் முன்பதிவு கட்டணம் ஆன்லைனில் ரூ.5 ஆயிரம் என்றும் விற்பனையகம் செல்வோர் ரூ.21 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here