2020 எப்படிஇருக்கும்? என்பதுகுறித்து இரட்டைக் கோபுரதாக்குதலை துல்லியமாக கணித்தகண் தெரியாதபாபா வாங்காகணித்து உள்ளார்.

பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு, பல்கேரியநாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில்85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும்  உள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர் டாம்ஸ் உலகில் கி.பி.3797வரை என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதைக்கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவைஅனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும்உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.14-12-1503 ல் பிறந்த இவர் 2-7-1566 ல் மறைந்தார். இவரதுவாழ்வு மிகவிசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும்,விபத்துக்களையும், கொலைகளையும் சுட்டிக்காட்டுவதால் சிறிது பயத்துடன்தான்  இந்த நூலை  அணுக வேண்டியிருக்கிறது.

அதுபோல் தான் இந்த பெண் பாபா வாங்கா. இவரது கணிப்புகளில் அதிகம் பலித்து உள்ளன.

2016 ஆண்டு மிகப் பெரிய இஸ்லாமிய போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக  ரசாயன ஆயுதத்தை  பயன்படுத்துவர். அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை  நிறுவுவார்கள் என கூறினார்.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல்நடைபெறும் எனக் கூறினார். அதே போன்றுஅந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது.அமெரிக்காவின் 44-வதுஜனாதிபதியாக ஒருகருப்பினத்தவர் பதவிஏற்பார் என்றுகணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம் வலுமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்துதன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதிரசாயன தாக்குதலைநடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.

இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். 2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும்பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.

2020 ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்புகள்:-

* 2020 ஐ பொருத்தவரை, வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பியமக்களுக்கும் கெட்டநேரம்தான்

* 2020ல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி நடக்கும். மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்கஅதிபர் டிரம்ப் கேட்கும் திறன் இழந்து மனநலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம் என்று கூறியுள்ளார்.

* ஐரோப்பா காணாமல் போகும் என்றும் பாபா கூறியிருக்க, பாபா கூறியது பிரெக்சிட்டை மனதில் வைத்துதான் என்றும் மக்கள் கருதுகின்றனர். அத்துடன்2020ல் ஐரோப்பாவை தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களுடன் தாக்குவார்கள். 

மேலும் அவருடைய கணிப்புகள்;-

* 2025: உலகளாவிய பசி 2025-2028-க்குள் ஒழிக்கப்படும்.

* 2028: மனிதன் சுக்கிரன் கிரகத்திற்கு பறப்பான்.அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களைகண்டறிவார்கள்.

*  2033: உலகில் துருவபனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்.

* 2043:  ஐரோப்பா  முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும். ரோம் அவர்களின் தலைநகராகும்.

* 2072 மற்றும் 2086-க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிசசமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்.

* 2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில்  பூமியில்இருந்து சுதந்திரமாக பிரிந்துஅணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனிஅமைக்கப்படும், உலகில் கடலுக்குஅடியில் நகரங்கள் உருவாகும். வேற்று கிரகவாசிகளின் கண்டுபிடிப்புகள், அதி பயங்கரமானகண்டுபிடிப்புகள் நடக்கும்.

* 2262 ஆம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நமது காலபயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லிம்அதிகாரிகளுடன் போரிடுவார்கள்.

* 2341ல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும்.பின்னர் நமது பூமி வசிக்கத்தகுதி அற்றதாகமாறி விடும். மனிதர்கள் நமது சூரிய குடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.

* 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள் நடக்கும்.மனிதர்களுக்கு இறப்பே கிடையாது. வேற்று கிரகவாசிகள் உள்வாங்கப்படுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம்பேச  சிதறி ஓடுவார்கள்.

* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.

Courtesy : dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here