அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் இந்து மதத்தைச் சேர்ந்த துளசி கபார்ட், ( வயது37) அமெரிக்க காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண்ணாக உள்ளார். வெள்ளிக்கிழமை அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அவர் ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையில் போட்டியிடும் இந்திய-அமெரிக்க வம்சாவழியின் செனட்டராக இருப்பார்.

கபார்ட் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல ஆனால் ஹவாயை சேர்ந்த ஒரு இந்து குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். 2011 ஆம் ஆண்டில் பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவி ஏற்றுக்கொண்டவர்.

கபார்ட் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்திற்காக பணியாற்றினார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த வாரம் முறையாக அறிவிப்பேன். அதுதான் போர் மற்றும் சமாதான பிரச்சினை ஆகும் என சிஎன்என்னுக்கு அளித்த பேட்டியில் கபார்ட் கூறி உள்ளார்.

https://twitter.com/JamesMelville/status/1084017550781005824

மேலும் துளசி கபார்ட் இராணுவ தேசிய காவலர் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் காங்கிரசில் பணியாற்றும் போது அவசர கடமைகளுக்கு அணி திரண்டிருக்கிறார். இராணுவ பின்னணியில், கபார்ட் சிரியாவில் அமெரிக்க ஈடுபாட்டை எதிர்த்தார் மற்றும் அந்த நாட்டின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை சந்தித்ததற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

கபார்ட் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய ஆதரவாளர். மேலும் இந்தியாவின் வலுவான ஆதரவாளராகவும், அமெரிக்க-இந்திய உறவை தீவிரமாக ஆதரித்தும் வருபவர்.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவிகளைக் குறைப்பதற்கும், அதன் சர்வதேச ஆதரவு பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வாதிட்டு உள்ளார்.

மேலும் டிரம்ப் 2016 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, கபார்டுக்கு டிரம்ப் நிர்வாகத்தில் ஒரு வேலை கிடைத்தது. வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜமால் கசோகஜி படுகொலை செய்த சவுதி அரேபியாவிற்கு எதிராக ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்காத டிரம்ப் என விமர்சித்தார்.

கபார்ட், ஹவாய் மாநில சட்டமன்றத்தில் 21 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் 2020 ஆம் ஆண்டிற்கான அதிபர் பதவிக்கு போட்டியிடும் மிகவும் இளவயதினர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here