தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ். திருநாவுக்கரசர் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் விவரம்:

திருவள்ளூர் (தனி) – கே. ஜெயக்குமார்
கிருஷ்ணகிரி – ஏ. செல்லகுமார்
ஆரணி – எம்.கே. விஷ்ணு பிரசாத்
கரூர் – ஜோதிமணி
திருச்சி – சு. திருநாவுக்கரசர்
தேனி – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
விருதுநகர் – மாணிக் தாக்கூர்
கன்னியாகுமரி – ஹெச்.வசந்தகுமார்
புதுச்சேரி – வைத்திலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here