2019 மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இன்று (புதன்கிழமை) வெளியிட்டனர்.

அதன்படி, ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா போட்டியிடுகிறார். ஜம்மு மற்றும் உதாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

அனந்த்நாக் மற்றும் பாராமுல்லா தொகுதியில் இரண்டு கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்துகிறது. இந்த 2 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு இடையே நட்பு ரீதியான போட்டி என்று தெரிவித்தனர்.

மேலும், லடாக் தொகுதி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here