2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

அமித்ஷா ஹைதராபாத்தில் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து 2019 மக்களவைத் தேர்தல் பற்றி பேசினார்.

அப்போது பாஜக கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா தற்போது அங்கு ராமர் கோயில் கட்ட நிலவி வரும் இடர்பாடுகள் நீக்கப்பட்டு, சுமூகமாக கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்படும். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே அயோத்தியா ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அச்சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய நிர்வாக உறுப்பினர் பேரலா சேகர்ஜி 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே அயோத்தியா ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்படும் என்றூ அமித் ஷா உறுதியளித்ததாக கூறினார்.

Courtesy : NDTV

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்