2019 மக்களவைத் தேர்தலுக்காக உறுதியான பாஜக , நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி

0
222

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை, பாஜக தலைவர் அமித் ஷா இன்று (வியாழக்கிழமை) சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினார்.

பீகாரில் பாஜக-வுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், ஒரு நாள் பயணமாக பீகாருக்கு சென்ற பாஜக தலைவர் அமித் ஷா, பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரைச் சந்தித்து பேசினார்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து காங்கிரஸை நாட்டை விட்டு துரத்தும் நேரம் வந்துவிட்டது என்றும் 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் 40 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக – நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெல்லும் என்றும், 40 தொகுதியிலும் சேர்ந்தே போட்டியிடுவோம் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்