2019 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி – காங்கிரஸ்

0
653

2019 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி ஆட்டத்தை மாற்றுபவராக (game changer) இருப்பார் என்றும் மிகப்பெரிய ஒரு பொறுப்பை ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார்.

சல்மான் குர்ஷித்தின் கருத்துக்களுக்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் –

பிரியங்கா காந்தி வத்ரா பல விஷயங்களில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார் . அதில் என்ன தவறு இருக்கிறது . பிரியங்கா காந்தி தேர்தலில் நிற்கப்போவதாகவோ, மாட்டார் என்றோ குர்ஷித் கூறவில்லை. பிரியங்கா காந்தி வரும் 2019 மக்களவைத் தேர்தலில் மிக முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார் . கட்சியின் கூட்டம் மற்றும் மற்ற நடவடிக்கையிலும் அவர் கலந்து கொள்வார்.

தான் ஏற்கும் பொறுப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை பிரியங்கா காந்திக்கு உண்டு . தான் தேர்ந்தெடுத்தவற்றில் அவர் மிக சிறப்பாக செயல்படக்கூடியவர் .

அவர் 2019 தேர்தலில் முக்கிய பங்காற்றுவார் என்பது தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறார் அல்லது தேர்தலில் போட்டியிடுவார் என்று அர்த்தமல்ல. அவர் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அதில் ஒழுங்குபடுத்தப்பட்ட பணிகளையே செய்வார்.

பிரியங்கா காந்தி ஏற்கனவே கட்சிக்காக பல வேலைகளைச் செய்திருக்கிறார். அதைத்தான் தொடர்ந்து செய்யப் போகிறார். அது அவருடைய தேர்வு . இதைத் தவறாக புரிந்துக் கொள்ளக்கூடாது ,

Courtesy :NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here