2019ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ஜக்கி வாசுதேவுக்கு ஒரு நீதி , நமக்கு ஒரு நீதியா?

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவுக்கு எதிரான கட்சியுடன் கூட்டணி வைப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். அதுபோன்ற முறையான திட்டம் இருந்தால் நான் நிச்சயம் அங்கு இருப்பேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : பெண்களை கொஞ்சம் தூங்கவிடுங்கள்

மேலும் அவர், “உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கலாம். ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜகவால் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது. எனக்கு வங்கம் மீது நம்பிக்கை உள்ளது. இங்குள்ள மக்களை எந்த காரணத்தைக் கூறியும் பிரிக்க முடியாது, மக்களும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : “இப்போது” வில் நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்

காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, ”சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற பல காரணங்கள் உள்ளன. இதில் முதன்மையானது மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்கியதுதான்.” என கூறியிருந்தார். அந்தக் கருத்தையே தற்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : அரசு ஆஸ்பத்திரி அலட்சியம் : நெஞ்சம் பதற வைக்கும் வீடியோ

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்