2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றால் பிரதமராவேன் – ராகுல்காந்தி

0
439

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமராக பதவியேற்பேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கானவாக்குப்பதிவு எண்ணிக்கை மே15ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற
ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் நடந்த சம்ருதி பாரத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது
நிகழச்சியில் பங்கேற்றவர்கள் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு பிரதமராக பதவி ஏற்பீர்களா? என்று கேட்ட போது

“வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெறும்.உத்தரப் பிரதேசதத்தில் பாஜகவுக்கு 5 இடங்கள் கூட கிடைக்காது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும். கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை
கிடைத்தால் பிரதமர் பதவியில் அமர்வேன் .

அரசியலில் பெண்களின் பங்களிப்பு பற்றி கேட்டபோது, காங்கிரஸ் கட்சியிலிருந்து குறைந்தது 10 பெண் முதலமைச்சர்களாவது வர வேண்டும் . நான் இவ்வாறு கூறுவது இங்கிருக்கும் பல ஆண்களுக்கு பிடிக்காது அதுவும் பல மூத்த தலைவர்களுக்கு பிடிக்காது. ஆனால் நான் அதைத்தான் செயல்படுத்த விரும்புகிறேன் . கர்நாடகா காங்கிரஸ்
இந்தத் தேர்தலில் வெறும் 12 பெண்களுக்கு சீட் ஒதுக்கியது என்னை கவரவில்லை.

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸை ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார். ஆனால் மகா ஊழல் செய்த எடியூரப்பாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்த குற்றச்சாட்டைக் கூறுகிறார். 35,000 கோடி ரூபாய் ஊழல் செய்த ரெட்டி சகோதரர்களின் ஊழலை கர்நாடக மக்கள் இன்னமும் மறக்கவில்லை’’ என்றும் கூறினார்

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here