2019 இல் வெளியான படங்களில் அதிக வசூல் பெற்ற பிகில் ; ஆதாரத்துடன் நிரூபிக்கும் புள்ளிவிவரம்

0
785

 மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் – அட்லி – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில்.  தயாரிப்பு – ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு – ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் – விவேக், படத்தொகுப்பு – ரூபன் எல். ஆண்டனி, கலை – முத்துராஜ், சண்டைப் பயிற்சி – அனல் அரசு. 

இந்நிலையில் சென்னை – குரோம்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற திரையரங்கரமான வெற்றியில் இந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூலைக் கண்டுள்ளது பிகில் படம். இத்தகவலை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் தெரிவித்துள்ளார். நேற்று வரை 40,000க்கும் மேலான ரசிகர்கள் வெற்றி திரையரங்கில் பிகில் படத்தைக் கண்டுகளித்துள்ளார்கள். இந்த வருடம் வெளியான படங்களிலிருந்து கிடைத்த – வரி நீங்கலான வசூல், மொத்த வசூல், பார்வையாளர்கள் எண்ணிக்கை என எல்லாவற்றிலும் பிகில் படமே முதலிடத்தில் உள்ளதாக ராகேஷ் கெளதமன் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here