இந்திய அணி 2018ஆம் வருடம் 14 டெஸ்டுகள், 20 ஒருநாள், 19 டி20 ஆட்டங்களில் விளையாடி அதிக வெற்றிகளைப் பெற்றது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் இந்திய அணி பங்கேற்கவுள்ள தொடர்களை இங்கே பார்க்கலாம்.

இந்த வருடம் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி குறைவான டெஸ்டுகளிலேயே பங்கேற்கிறது. மேலும் உலகக் கோப்பையை அடுத்து டெஸ்ட் உலகக் கோப்பைக்கான தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்டுகளுடன் இந்திய அணியின் தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளன. 2018-2019 முதல் 2022-23 வரை இந்திய அணி 51 டெஸ்டுகள், 83 ஒருநாள், 69 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்படி இந்த வருடம் இந்திய அணி 8 டெஸ்டுகளும் 19 ஒருநாள் மற்றும் 11 டி20 ஆட்டங்களிலும் கலந்துகொள்கிறது. மேலும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் குறைந்தபட்சம் 9 ஆட்டங்களில் விளையாட வேண்டியுள்ளதால் இந்த வருடம் இந்திய அணி குறைந்தபட்சம் 28 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது.கடந்த வருடத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

இந்த வருட ஐசிசி எஃப்டிபி-யின்படி, மார்ச் மாதம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவேண்டும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதமே ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளதால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்தத் தொடர்கள் நடைபெறாது என்றே தெரிகிறது. இந்தியாவுக்கு வரும் ஆஸ்திரேலியா தனது கடைசி ஆட்டமாக மார்ச் 13 அன்று டி20 ஆட்டத்தில் பங்கேற்கிறது. இதன்பிறகு ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

2019-ல் இந்திய அணி ஆடப்போகும் டெஸ்டுகள் – 8
ஒருநாள் போட்டிகள் – 28 (குறைந்தபட்சம்)
டி20 போட்டிகள் – 11

2019-ல் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள தொடர்கள்:

ஆஸ்திரேலியாவுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் 2 டி20 மேலும் தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்டுகள், வங்கதேசத்துடன் 2 டெஸ்டுகள்,3 டி20 போட்டிகளிலும் இந்தியா விளையாடும்.

3 ஒருநாள் vs மேற்கிந்தியத் தீவுகளுடன் 3 டி20 போட்டிகளிலும் இந்தியா விளையாடுகிறது.

வெளிநாடுகளில் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்:

ஆஸ்திரேலியாவுடன் 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும், நியூஸிலாந்து அணியுடன் 5 ஒருநாள், 3 டி20, அதைத்தொடர்ந்து உலகக் கோப்பை பொட்டிகளிலும் ஆடுகிறது. மேலும் மேற்கிந்தியத் தீவுகளுடன் 2 டெஸ்டுகள், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளிலும் இந்தியா விளையாடுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்