இந்திய பங்குச் சந்தைகள், 2018ஆம் ஆண்டின் முதல் நாளான (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 30.69 புள்ளிகள் உயர்ந்து 34,087.52 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 4.00 புள்ளிகள் உயர்ந்து 10,534.70 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.81ஆக உள்ளது.

நிஃப்டி பட்டியலிலுள்ள விப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், டிசிஎஸ், என்.டி.பி.சி, ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து காணப்படுகின்றன. அதேபோன்று, எல் அண்ட் டி, எஸ்பிஐ, ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், ஐடிசி லிமிடெட், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்