Ciaz

இணையதளங்களில் , புதிய மாருதி சியாஸ் (Maruti Ciaz) காரின் அறிமுகம் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

கடும் சந்தை நெருக்கடியை கருத்தில் கொண்டு, சியாஸ் காருக்கு புதுப்பொலிவு கொடுத்து புதிய எஞ்சின் ஆப்ஷனையும் சேர்த்துள்ளது மாருதி நிறுவனம்.தற்போது இந்த கார் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய மாருதி சியாஸ் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் தொடர்ந்து பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்

புதிய மாருதி சியாஸ் காரில் சிறிய டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பக்க க்ரில், பம்பர் உள்ளிட்டவற்றை மாற்றி இருக்கிறது மாருதி. புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் அலாய் வீல்கள் முக்கிய மாற்றங்களாக இருக்கும்.

உட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்ட்டரியும் டேஷ்போர்டின் உதிரிபாகங்கள் அதிக தரமிக்கதாகவும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், எலக்ட்ரிக் சன்ரூஃப் கொடுக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, வரும் ஜூலை மாதம் முன்பதிவு துவங்குவதற்கும் மாருதி திட்டமிட்டுள்ளது.

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களை விற்பனையில் வீழ்த்தி முதலிடத்தில் உள்ள புதிய மாருதி சியாஸ் வழக்கம்போல் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் .

Maruti-Ciaz-official-9

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்