inr-vs-usd: ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக செயல்படும் இந்தியா தனக்கான ஆற்றல் தேவையை முழுவதுமாக இறக்குமதியை சார்ந்து இருப்பது இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்கும்.

இந்திய ரூபாயின் மதிப்பு 2019ல் அதிகரிக்கலாம்.
உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை கரன்சி மார்க்கெட் ரெலியில் இந்திய ரூபாய்க்கு கிறிஸ்மஸ் ‘பரிசாக’ கொடுத்துள்ளது. அந்நிய செலவாணி சந்தையில் கடைசி காலாண்டில்  இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. மார்ச் 2017 முதல் கணக்கிடப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு மிகவும் வேதனையளிக்கும் விதமான செய்திகளையே நமக்கு விட்டுச் சென்றுள்ளதாக நிதியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உயர்ந்து வரும் என்ர்ஜி காஸ்ட்டும், வலுவான டாலரின் மதிப்பும் இந்திய ரூபாயின் மதிப்பை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.

பெடரல் ரிசர்வ் மூலம்  இந்திய ரூபாய் மூலம் அதிக வருவாய் ஈட்டும் வழிகளை இனி கண்டறியலாம் என்று நிதியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 
indian money.002
சிங்கப்பூரில் உள்ள நோமுரா ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் நிதியியல் வல்லுநர் துஷ்யந்த் பத்மநாபன், “இனி வரும் ஆண்டில் இந்திய ரூபாய் சிறப்பாக செயல்படும், குறிப்பாக டோட்டல் ரிடர்ன் பேஸிஸ் என்ற அடிப்படையில் சிறப்பாக செயல்படும்” என்று கூறினார்

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக செயல்படும் இந்தியா தனக்கான ஆற்றல் தேவையை முழுவதுமாக இறக்குமதியை சார்ந்து இருப்பதும், கச்சா எண்ணெய்யின் விலை அக்டோபர் மாதத்தில் அதிகரித்ததும் இந்திய ரூபாயின் மதிப்பின் சரிவிற்கு காரணமாக இருந்தது. 2018 -ல்12 பில்லியன் அளவிற்கு இந்திய பங்கு பத்திரங்கள் வெள்நாட்டு முதலீடுகளை பெற்றன. 2019ல் இந்திய ரூபாய் சிறப்பாக மதிப்பு உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
[orc]
courtesy: ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here