1. ஆதார் வழக்கு:

இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமையே என ஆதார் தொடர்பான வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பது தனிநபர் ரகசியம் காக்கும் உரிமைக்கு (Right to Privacy) எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கினை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜேஎஸ் கெஹர், ஜே.சலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ரோஹிண்டன் நரிமன், ஏ.எம்.சப்ரே, டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் அப்துல் நஸீர் ஆகிய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

அரசியல் சட்டப்பிரிவு 21வது விதியின்படி தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமையே என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. இதனை விசாரித்த ஒன்பது நீதிபதிகளும் கருத்தையே தெரிவித்தனர்.

2. முத்தலாக் வழக்கு:

முத்தலாக் முறை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆக.22ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது.

ஒரே நேரத்தில் தலாக் எனும் வார்த்தையைத் தொடர்ந்து மூன்று முறைச் சொல்லி விவாகரத்து செய்து கொள்ளும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்குகளை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் தலைமையில், குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நரிமன், யூயூ லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இதையும் படியுங்கள்: ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்

அதில், முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்றும், பிற்போக்குத்தனமானது என்றும் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக சட்டமியற்றவும் உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. இதனடிப்படையில் மத்திய அரசு, முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்பவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான வரைவு சட்டத்தைத் தயார் செய்துள்ளது

3. ஆருஷி வழக்கு:

ஆருஷி கொலை வழக்கில், கடந்த அக்.12ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி அவரது தந்தை ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியன்று நொய்டாவில், மருத்துவர்களான ராஜேஷ் – நூபுர் தல்வார் ஆகியோரின் மகள் 14 வயது சிறுமி ஆருஷி, கழுத்தறுக்கப்பட்டநிலையில் வீட்டின் படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டார். அதேபோன்று, அடுத்த நாளனன்று, அவரது வேலைக்காரர் ஹேம்ராஜ் என்பவரும் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் மற்றும் தாயார் நுபுர் தல்வார் ஆகியோருக்கு காசியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது.

இதனை எதிர்த்து இருவர் தரப்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், வழக்கில் சந்தேகத்தின் பலனை இருவருக்கும் அளித்து விடுதலை செய்தது.

நன்றி: ScoopWhoop.com

இதையும் படியுங்கள்: கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்