2016 தேர்தலில் இலவசமாக செல்போன் வழங்குவதாகச் சொன்னீர்கள் ஏன் வழங்கவில்லை? என்ற கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசனின் பதில் இதுதான்

0
256

தமிழகத்தில் 100-க்கு 95% பேர் செல்போன் வைத்திருந்ததால் வீணாகக் கூடாது என்பதால் நாங்கள் வழங்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அனைவரும் அவர்கள் வீடுகளுக்கு முன் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 2016-ம் ஆண்டு தேர்தலில் இலவசமாக செல்போன் வழங்குவதாகச் சொன்னீர்கள் ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பியதற்கு, விசாரித்ததில் செல்போன் இல்லாமல் யாரும் இல்லை, அது தேவையில்லாமல் ஒன்றாக போய்விட்டது.

அதனால், இந்த தேர்தல் அறிக்கையில், வாஷிங் மெஷின், இருசக்கர வாகனம், வருடத்திற்கு 6 சிலிண்டர் கொடுப்பதாக சொன்னோம், மின்சார அடுப்பு, வீடு இல்லாதவர்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித்தருவதாக சொன்னோம். தமிழகத்தில் 100-க்கு 95% பேர் செல்போன் வைத்திருந்ததால் வீணாகக் கூடாது என்பதால் நாங்கள் வழங்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here