2015-16ஆம் ஆண்டு வரையில் ரூ.44,282/- கோடிகள் மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வணிகவரித்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், 2015-16 ல் டிசம்பர் 2015 வரையில் ரூ.44,282/- கோடிகள் மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வரி வருவாய் 2014-15 ல் வசூலான ரூ.43,517/- கோடிகளுடன் ஒப்பிடும்போது ரூ.765/- கோடிகள் கூடுதலாகும் என தெரிவித்தார்.

மேலும் அவர், வணிகவரித்துறையின் வரிவிதிப்பு மற்றும் செயலாக்கம் ஆகிய இரு பிரிவுகளும், போலிவணிகம் செய்யும் வணிகர்கள் மீது ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கை எடுத்தும், தவறான உள்ளீட்டு வரிவரவு பெற்று பயனடைந்த வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரி வருவாயினை அதிகப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலர் உட்பட பல அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்