2014 ஆம் ஆண்டை விட 3 மடங்கு அதிகம்; பறிமுதல் செய்யப்பட்ட பணம், மது, பொருட்கள் மதிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

0
125

மக்களவைத் தேர்தலின் போது ரூ.3449 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், மது வகைகள், தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், போதைமருந்துகள் கைப்பற்றப்பட்டன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

17-வது மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 10-ம் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  அமலில் இருந்தது.

 தேர்தல் பறக்கும் படையினர் நாடுமுழுவதும் நடத்திய சோதனையில் ஏறக்குறைய ரூ.3,500 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக ரூ.1,206 கோடிக்கு மட்டுமே ரொக்கம், பொருட்கள் பறிமுதல் ஆகி இருந்தநிலையில் இப்போது அதைக்காட்டிலும் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

மார்ச் 10ம் தேதி முதல் மே 19-ஆம் தேதிவரை ரூ.893 கோடி ரொக்கம், ரூ.294.41 கோடி மதிப்புள்ள மது வகைகள், ரூ.1270.37 கோடி மதிப்புள்ள போதைமருந்துகள், தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் ரூ.986.76 கோடி, வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்களாக இருந்த புடவை, கைக்கடிகாரம், உள்ளிட்ட பல பொருட்களின் மதிப்பு ரூ.58.86 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையர் திலீப் சர்மா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here