கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற 15 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி அதன் செல்வாக்கை இழந்துள்ளது என்பதனை அறிய முடிகிறது.

1. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 282 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட கூடுதலாக பாஜக பெற்றிருந்தது.

2. 29 மாநிலங்களில் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் 15 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 2014ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவிலும்; 2015ஆம் ஆண்டில் பீகார் மற்றும் டெல்லியிலும்; 2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும்; 2017ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற்றன.

3. கடந்த 2014ஆம் ஆண்டில் இந்த 15 மாநிலங்களில், பாரதிய ஜனதா கட்சி 191 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. மக்களவைத் தொகுதி என்பது குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த கணக்கீட்டின்படி, 191இல் 146 மக்களவைத் தொகுதிகளை மட்டுமே பாஜக தன்வசம் தக்க வைத்துள்ளது.

4. கடந்த 2014ஆம் ஆண்டு, 1171 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்த பாஜக, அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் 854 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதாவது 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி இழந்துள்ளது.

5. இந்தாண்டில் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த நான்கு மாநிலங்களில் 79 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றிருந்தது. மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஏற்பட்ட சரிவு தொடருமானால், மேலும் சில மக்களவைத் தொகுதிகளை இழக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதனை 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளுடன் ஒப்பிடும்போது அதன் எண்ணிக்கை 216ஆக குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நன்றி : indiaspend.com

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here