கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி சதவிகிதம் அபரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

நடந்து முடிந்த மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 35 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், ஐபிஎஃப்டி கட்சி எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

இம்மாநிலத்தில் ஐபிஎஃப்டி கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தாலும், தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்துள்ளது. இம்மாநிலத்தின் முதல்வராக பிப்லாப் தேப் பதவியேற்றுக் கொண்டார். அதேபோன்று நாகாலாந்து மாநிலத்திலும், மேகாலாயா மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகலாயா, திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி 13.4 சதவிகித வாக்கு வங்கியை இழந்துள்ளது. 2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி இம்மாநிலங்களில் 38.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் தற்போது 24.7 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 3.9 சதவிகிதமாக இருந்த அதன் வாக்கு வங்கி தற்போது 27 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

மேகாலாயா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 28.5 சதவிகிதமாக உள்ளது. மேலும் அதிக வாக்குகளைப் பெற்று தனிப்பெரும் கட்சியாகத்தான் காங்கிரஸ் கட்சி மேகாலாயாவில் உள்ளது. அதேநேரத்தில் பாஜக, அம்மாநிலத்திலுள்ள மற்ற இதர கட்சிகளான தேசிய மக்கள் கட்சி, யூடிபி உள்ளிட்ட ஐந்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 1.27 சதவிகிதத்திலிருந்து 9.6 சதவிகிதமாக பாஜகவின் வாக்கு வங்கி இம்மாநிலத்தில் உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

திரிபுரா மாநிலத்தில் 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. கடந்த 2013ஆம் ஆண்டில் 34.7 சதவிகிதமாக இருந்த காங்கிரசின் வாக்கு வங்கி, 2018ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் 1.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

அதேநேரத்தில் 2013ஆம் ஆண்டில் 1.3 சதவிகிதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி, தற்போது 43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 24.9 சதவிகிதமாக இருந்தது. ஆனால் தற்போது வெறும் 2.1 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. பாரதிய ஜனதா கட்சி வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தனது வாக்கு வங்கியை அபரிதமாக வளர்த்துக்கொண்டுள்ளது.

நன்றி : indiaspend.com

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children