ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் 2006 – 2008 இல் வங்கிகளின் அதீத நம்பிக்கையே வாராக்கடன்களுக்கு முக்கியமான காரணம் என்று கூறியுள்ளார் . மேலும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலையும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் முடிவெடுக்கும் விவகாரங்களில் மெத்தமான போக்கும் காரணங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ரகுராம் ராஜன் வாராக்கடன்களுக்கான காரணங்களை நாடாளுமன்ற மதிப்பீடு குழுவுக்கு அனுப்பி வைத்தார் . அந்த குழுவுக்கு தலைவராக இருப்பவர் பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி .

வாராக்கடன்கள் அதிகமாக 2006 லிருந்து 2008 ஆண்டுகளில் உருவானது, அப்போது பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தது முந்தைய உள்கட்டமைப்பு திட்டங்கள் சரியான நேரத்திலும், சரியான வரவு செலவு திட்டத்திலும் முடிவடைந்தது . அப்போதுதான் வங்கிகள் தவறை செய்தது . கடந்த கால வளர்ச்சியை மதிப்பிட்டும் , எதிர்காலத்தில் அதிக செயல்திறன் இருக்கும் என்று கருதியும் வங்கிகள் அதிகமாக கடன் வழங்கியது . இந்த மாதிரியான நிகழ்வுகள், வளர்ச்சியை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில் பொதுவாக நடப்பவைதான்.

எதிர்பார்த்த வளர்ச்சி எப்போதும் இருக்காது . வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தபோதும் உலகளவில் நிதி நெருக்கடி வந்த போது , இந்தியாவையும் பொருளாதார மந்தநிலை பாதித்தது . இது முந்தைய திட்டங்களை தாக்கியது என்றும் ரகுராம் ராஜன் நாடாளுமன்ற மதிப்பீடு குழுவுக்கு எழுதி அனுப்பியுள்ளார்.

பலதரப்பட்ட ஆட்சி நிர்வாகப் பிரச்சினைகள், அதாவது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சந்தேகத்துக்குரிய விதங்களில் ஒதுக்கீடு, இதனுடன் விசாரணைகள் குறித்த அச்சம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகளின் முடிவெடுக்கும் திறன்களில் மந்தம்” ஆகியவை வாராக்கடன் பிரச்சினைகளுக்குக் காரணமானது என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

வங்கியாளர்களின் அலட்சியம், அளவுக்கு மீறிய நம்பிக்கை, சிறிதளவு ஊழல் கடன் தாரர்களை மதிப்பிடுவதில் திறமைக்குறைவு ஆகியவற்றை வாராக்கடனுக்கு காரணமாக கூறலாம் என்று கூறியுள்ளார்.

Courtesy : Scroll.in

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்