2002 குஜராத் கலவர வழக்கு : 17 குற்றவாளிகளுக்கு நிபந்தனை ஜாமீன்

0
126

2002 குஜராத் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று(செவ்வாய்க்கிழமை) நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 

2002 சர்தார்பூரா கலவரத்தின் போது 33 முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 17 குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள் மத்திய பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யாகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழு குஜராத்திலிருந்து வெளியேறி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் தங்கியிருக்க வேண்டும். இதர குற்றவாளிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூருக்கு இடம்பெயர வேண்டும் என்று என்று உத்தரவிட்டது. 

அனைத்து குற்றவாளிகளும் வாரந்தோறும் ஆறு மணி நேரம் சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும். அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் ஜாமீன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாரந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் ஜாமீன் நிபந்தனைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு இந்தூர் மற்றும் ஜபல்பூரில் உள்ள மாவட்ட சட்ட சேவை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டஉச்ச நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிகளின் நடவடிக்கை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மத்தியப்பிரதேச மாநில சட்ட சேவை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here