2000 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி

0
148

600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று விதி எண்.110-ன் கீழ் முதல்வர் பேசுகையில், 
1. அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டுகளில் பல புதிய பேருந்துகளை பொது மக்களின் சேவைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும், புதியதாக 2,000 பேருந்துகள், 600 கோடி ரூபாய் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும் என்பதனை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.

2. இந்த நிதியாண்டில், அரசு நிதி நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம் 10 அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி, நவீனப்படுத்தப்படும் என்பதனை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here