200 யூனிட் வரை இலவச மின்சாரம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கெஜ்ரிவால்

0
259

(ஆகஸ்டி 1, 2019) இன்று முதல் தலைநகர் டெல்லியில் 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறியுள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அதேபோல 201 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

(ஆகஸ்டி 1, 2019) முதல் இந்தியாவிலேயே மிகவும் மலிவான மின்சாரம் டெல்லியில்தான் கிடைக்கும். மிகவும் வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவால், எளிய மக்கள் பயனடைவார்கள்.  200 யூனிட்டுக்குக் கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். 

வி.ஐ.பி-க்களுக்கும் பெரிய அரசியல்வாதிகளுக்கும் இலவச மின்சாரம் கிடைத்தால் அது குறித்து யாரும் எதுவும் சொல்வதில்லை. இந்த முடிவு தவறானதா என்றும் கேள்வியெழுப்பினார். 

இந்த முடிவின் மூலம் டெல்லியில் இருக்கும் 33 சதவிகிதம் மக்கள் பயனடைவார்கள் என்று கூறிய கெஜ்ரிவால், குளிர்காலத்தின்போது 70 சதவிகித மக்கள் 200 யூனிட்டுக்கும் குறைவாகத்தான் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார். டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்பட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

டெல்லியில் தற்போது 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணமாக ரூ.622 வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி அந்த கட்டணம் செலுத்த தேவையில்லை.