சென்செக்ஸ் இன்று புதிய வரலாற்று உயர்வை தொட்டது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 212.85 புள்ளிகள் உயர்ந்து 36,478.78 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 64.15 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி 11,012.45 புள்ளியில் வர்த்தகமானது.

30ல், 26 பங்குகள் இன்று உயர்வுடன் தொடங்கின. இன்றைய வர்த்தகத்தில் ஏசியன் பெயின்ட்ஸ் (1.48%), ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் (1.27%) கோட்டக் மஹேந்திரா வங்கி(1.18%), எஸ்.பி.ஐ (1.08%), கோல் இந்தியா (1.04%) மற்றும் இன்டஸ்லேண்ட் வங்கி(1%), ஆகிய பங்குகள் உயர்வுடன் இருந்தன. அதே நேரம், டி.சி.எஸ் (-0.29%), ஐ.டி.சி (0.16%), மஹிந்திரா & மஹிந்திரா(0.39) மற்றும் ஓ.என்.ஜி.சி பங்குகள் (-1.36%) குறைந்தன.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்(4.19%), ஐ.ஓ.சி (4.01%), பி.பி.சி.எல் (3.87%), டாக்டர். ரெட்டீஸ் (+2.85%) மற்றும் ஹெச்.சி.எல் டெக் (2.13%) ஆகிய நிஃப்டி பங்குகளும் உயர்வை சந்தித்துள்ளன. அதே நேரம் பாரதி இன்ஃபிராடெல் (-2.73 %) டி.சி.எஸ் (-0.63%), கெயில் (0.34 %), இன்ஃபோசிஸ்(-0.29%) மற்றும் விப்ரோ (-0.26%)

சீனாவின் ஷாங்காய் பங்குச்சந்தை, 52.67 புள்ளிகள் உயர்ந்து 2,830.44 புள்ளிகளில் வர்த்தகமானது. ஹாங் காங் ஹாங் செங் 201.18 புள்ளிகள் உயர்ந்து 28,512.87 புள்ளிகளாக வர்த்தகமானது. சீனா அமெரிக்க இடையேயான வர்த்தக மோதல், முதலீட்டாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.35% அதிகரித்தது. ஒரு பேரலின் விலை 74.38 டாலர்களுக்கு விற்பனையானது. புதன்கிழமை அன்று பங்குசந்தை உயர்வும், தாழ்வும் என ஊசலாட்டத்திலேயே இருந்தது. இருந்த போதும் பங்குச் சந்தை முடிவில், சென்செக்ஸ் 36,265.93 புள்ளிகளிலும், நிஃப்டி 10.948.30 புள்ளிகளிலும் முடிவடைந்தது.

வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Courtesy : ndtv tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here