கன்னடப்பட சரித்திரத்தில் முதல்முறையாக ஒரு படம் 200 கோடி வசூல் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

கன்னட திரையுலகின் வர்த்தக பரப்பு சிறியது. 100 கோடிகளுக்குள்ளேயே அடங்கிவிடுவது. முதல்முறையாக கேஜிஎஃப் திரைப்படம் அந்த எல்லையை கடந்திருக்கிறது.

யாஷ் நடித்த இந்தப் படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தமிழகத்தில் படத்தின் வசூல் சுமார் என்றாலும், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்திப் பேசும் மாநிலங்களில் நல்ல வசூலை பெற்றது. முதலில் 100 கோடிகளை கடந்த கன்னடப்படம் என்ற பெருமையை பெற்ற படம் தற்போது 200 கோடிகளை கடந்த கன்னடப்படம் என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறது.

கன்னடத்தைப் பொறுத்தவரை கேஜிஎஃப்பின் வசூல் ஓர் சாதனை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here