நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் 3 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை நிகழ்த்தியுள்ளது.தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச் செல்ல பயன்படும் சரக்கு பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைத்து 2.8 கி.மீ., கொண்ட ரயிலினை உருவாக்கினர்.

நான்கு ஜோடி மின்சார என்ஜின்கள், 4 கார்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலி சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. சேஷ்னாக் என பெயரிடப்பட்ட இந்த நீளமான ரயிலை தென்கிழக்கு மத்திய ரயில்வே இயக்கி சாதனை படைத்தது.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ இந்திய ரயில்வேயின் இந்த சாதனை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் அதிக அளவிலான சரக்குகளை கொண்டு செல்ல வழிவகை செய்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here