2.0 படத்தின் பட்ஜெட் குறித்து பல்வேறு தகவல்கள் உலவுகிறது. 300 கோடியில் ஆரம்பித்த பட்ஜெட், படம் வளர வளர பட்ஜெட்டும் உயர்ந்து 550 கோடியில் வந்து நிற்கிறது. 550 கோடிகள் என்பது ரஜினி வெளியிட்ட தகவல். ஆனால், படத்தின் உண்மையான பட்ஜெட் என்ன?

இயக்குநர் ஷங்கர் அளித்த பேட்டியில், படத்தின் சரியான பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே தெரியும். விஎப்எக்ஸுக்கு நாங்கள் எதிர்பார்க்காத அதிக செலவுகள் ஏற்பட்டன. என்னைப் பொறுத்தவரை 2.0 படத்தின் பட்ஜெட் 400 – 450 கோடிகள் இருக்கலாம். தயாரிப்பாளர்கள் செய்த விளம்பரம், புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு செலவானது என்பது அவர்களுக்குதான் தெரியும் என்றார்.

2.0 இன் பட்ஜெட் 550 – 600 கோடிகள் என்று செய்திகள் உலவுகையில் படத்தின் பட்ஜெட் 400 – 450 கோடிகள்தான். மற்றவை விளம்பரச் செலவுகள் என பட்ஜெட்டை தடாலடியாக குறைத்துள்ளார் ஷங்கர்.

படம் வெளியான பிறகு மேலும் பல ஆச்சரிய தகவல்கள் அணிவகுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here